Yazh Suthakar Pathilkal
Monday, August 04, 2003
யாழ் சுதாகர் பதில்கள் பகுதி
உங்கள் கேள்விகளை விமர்சனங்களை yazhsuthakar@yahoo.co.inஎன்னும் முகவரிக்கு எழுதுங்கள்.

ஆர். பிரபு, சென்னை-94
கண்ணதாசன் - வைரமுத்து... ஓப்பிடுங்கள்?
சாமி - பூமி
தத்துவம் - வாழ்க்கை
வரம் - உரம்
சிவரூபன், ஜெர்மனி
ஆசைதான் துன்பத்திற்கு காரணமா?
இல்லை.
ஆசை... மனிதனை வாழ வைக்கின்றது.
பேராசைதான் மனிதனை வீழ வைக்கின்றது.
சுஜாதா, நோர்வே
நான் வசிக்கும் நோர்வே நாட்டில் ஒருவரின் பெயருக்கு முன்னால்... திரு, திருமதி, செல்வன், செல்வி... போன்ற அடைமொழிகளை யாரும் பயன்படுத்துவதில்லை. இது சரியா?
மரியாதை... மனதில் மட்டும் இருந்தால் போதும். பெயரில் எதற்கு?... என்று அவர்கள் நினைத்தால்... அதுவும் சரிதான்.
நிரஞ்சன், கனடா
யார் உத்தமன்?
நமக்குத் தீங்கு நினைக்காத யாருக்கும்... நாமும் தீங்கு நினைக்கக் கூடாது என்று வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ அவனே உத்தமன்.
ஒப்பிடுக... அன்றைய இசை - இன்றைய இசை?
தென்றல் - மின்விசிறி
உமக்கு போதிப்பதில் அதிக விருப்பமா? சாதிப்பதில் அதிக விருப்பமா?
உலக விஷயங்களை சோதிப்பதில்!
கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல் எது?
1948 இல் வெளியான 'கன்னியின் காதலி' படத்தில் இடம் பெற்ற 'கலங்காதிரு மனமே' என்ற பாடல்தான் கண்ணதாசனின் முதல் பாடல். (இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு)
வாலியின் முதல் பாடல் 'நிலவும் தரையும் நீயம்மா' என்று துவங்குகிறது.
படம் - 'அழகர் மலைக் கள்வன்'
துரைப்பாண்டியன், திருவாரூர்
பேய் பிசாசுகள் குடியிருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் உங்களை மட்டும் தனியாக ஒரு இரவு தங்கி விட்டு வர வேண்டும் என்று சொன்னால்... தைரியமாகப் போய் படுப்பீர்களா?
பொதுவாக என்னோடு சேர்ந்தவர்கள் யாரும் உருப்பட்டதில்லை. பேய்கள் தரப்பில் ஆட்சேபணை இல்லாத பட்சத்தில்... ஒரு இரவென்ன பல இரவுகள் அவையோடு தங்க நான் தயார்.
மஞ்சு ராம்நாத், ஜெர்மனி
உமது குரு யார்?
அனுபவம்தான் எனது குரு. அறிவு என்ற விளக்கின் ஒளியில், அனுபவம் என்ற ஆசான் எனக்குப் புதிது புதிதாக போதித்துக் கொண்டே இருக்கின்றார்.
ஜி.விஸ்வநாதன், கண்டி
தனது மதம் மட்டுமே உயர்ந்தது என்று சொல்லிக்கொண்டு அலைபவனை என்ன செய்யலாம்?
தனது மதம் மட்டுமே உயர்ந்தது என்றும், தான் வணங்கும் கடவுள்தான் உண்மையானவர் என்றும், மற்ற மதத்தவர் வணங்கும் கடவுள்கள் பொய் என்றும் சொல்லிக் கொண்டு வருபவன் எவனாக இருந்தாலும்-
எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும்-
அவன் கழிப்பறைக்குச் சமமானவன். நம்மீது அவன் மூச்சுக் காற்றுப் பட்டாலும் தீட்டுப்படும். ஒரு சாக்கடையைப் போல் நினைத்து அவன் சகவாசத்தையும் எட்ட வைத்துவிட வேண்டும்.
'நல்ல இசை' என்பது எப்பழ இருக்க வேண்டும்?
சுசீலாவைப் பற்றி வைரமுத்து கூறும்போது-
'காதுக்குள் விழுந்து... ரத்தத்தில் கலந்து... உயிர் தடவும் சுசீலாவின் குரல்" என்றார்.
இந்த மாதிரி;யான இயல்பைப் பெற்றிருக்கும் எந்த இசையும் நல்ல இசையே.
கௌரி யோகராஜ், ஆஸ்திரேலியா
தாங்கள் அனுப்பி வைத்த எம்.பி3 சிடிக்கள் (நான்கு பாகங்களும்) கிடைக்கப் பெற்றேன். தங்களின் மணியான அறிவிப்பில் அத்தனை நிகழ்ச்சிகளுமே அருமை அண்ணா. நிகழ்ச்சியில் நீங்கள் சேகரித்து கொடுத்திருக்கும் பாடல்களும் கிடைக்க முடியாத பொக்கிஷங்கள் என்றால் மிகையில்லை.
உங்கள் நிகழ்ச்சியின்; அடுத்த தொகுப்பை (அதாவது ஐந்தாவது பாகத்தை) எப்போது தயாரிக்க உள்ளீர்;கள்? வெளியானதும் உடன் எனக்கு அறிவிக்க வேண்டுகிறேன்...
ஐந்தாவது தொகுப்பு வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் ஆகலாம். தயாரானதும் நிச்சயம் அறிவிக்கிறேன்.
சுப்புரத்தினம், மாயவரம்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்-ஜானகி பாடிய 'தேன் சிந்துதே வானம்... உனை எனை தாலாட்டுதே...' என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? இந்தப் பாடல் எந்த ராகத்தில் இசையமைக்கப் பட்டிருக்கின்றது?
ஜமுனா கல்யாணி ராகத்தில் உருவான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள். படம் - 'பொண்ணுக்குத் தங்க மனசு'.
'ஹரிச்சந்திரா' படத்திற்கு இசையமைத்தவர் யார்? (சிவாஜி நடித்த ஹரிச்சந்திரா அல்ல. பி.யூ. சின்னப்பாவும், கண்ணம்பாவும் நடித்த மிகப் பழைய ஹரிச்சந்திரா)
எஸ்.வி. வெங்கட்ராமன்.
'குலேபகாவலி' படத்தில் இடம் பெற்ற 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...' என்ற பாடலை இயற்றியவர் யார்?
அந்தப் பாடலை இயற்றியவர் விந்தன் அவர்கள், இவர் 'கல்கி' பத்திரிகையில் பணியாற்றியவர். இந்தப் பாடல் 'கூண்டுக்கிளி' படத்திற்காகத்தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தப்படத்தில்; இடம் பெறவில்லை.
'கூண்டுக்கிளி' படத்தி;ன் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா தான் 'குலேபகாவலி' படத்தையும் இயக்கினார். ஆனால் அந்தப் பாடலை பின்பு குலேபகாவலியில் பயன்படுத்திக் கொண்டார். இப்பாடலுக்கு இசை-கே.வி. மகாதேவன்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி முதலில் வெளிவந்த பாடல் எது?
சிவகுமாருக்காகப் பாடிய 'மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்' என்ற பாடல், படம் - 'பால் குடம்'.
'தேவதாஸ்' படத்தில் ஒலிக்கும் 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...? என்ற பாடலை இயற்றியவர் யார்?
கே.டி. சந்தானம்.
எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன்... இசையமைத்த முதல் படம் எது?
எம்.எஸ். விஸ்வநாதன் முதன் முதலாக 'ஜெனோவா' படத்திற்கு இசையமைத்தார். (இப்படத்தில் 4 பாடல்களுக்கு அவர் இசை தந்தார்)
கே.வி. மகாதேவன் முதன் முதலாக ச.து.சு. யோகியின் ஆனந்தன் (அக்னி புராணம்) படத்திற்கு இசையமைத்தார்.
பி.சுசீலா பாடிய முதல் பாடல்?
'பெற்ற தாய்' படத்தில் இடம் பெற்ற 'ஏன் அழைத்தாய்... என்னை ஏன் அழைத்தாய்' என்ற பாடல் (இசை - பெண்டியாலா)
கே.சி.ராஜன், திண்டுக்கல்
உமது பதில்களைப் படிக்கும்போது... அநேகமாக நீர் நாற்பது வயதைத் தாண்டியிருப்பீர் என்று தோன்றுகிறது. (பதில்களில் 'நாய் குணம்' தெரிகிறது..).
அந்த 'குணம்' எனக்கு பதினெட்டு வயதிலேயே வந்து விட்டது.
மகி.ரமணி, ஈரோடு.
பி.எச். அப்துல் ஹமீது - கே.எஸ். ராஜா? ஒப்பிடுங்கள்...
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
ஒப்பிடுங்கள்... டி.எம்.எஸ் - எஸ்.பி.பி?
சிங்கம் - மயில்.
ஒப்பிடுங்கள்... ஏ.எம். ராஜா - கண்டசாலா?
தென்றல் - கொஞ்சல்.
ஒப்பிடுங்கள்... ரஜினி - எம்.ஜி.ஆர்.?
சமயம் - மனிதம்
மலர்க்கொடி, வந்தவாசி.
பெண்கள்... அவசர புத்திக்காரர்கள் என்பதை ஒப்புக் கொள்வீர்களா? மறுப்பீர்களா?
அந்தக் காலத்து சிந்தனையாளர்கள் ஒப்புக் கொண்டார்கள். இந்தக் காலத்து சிந்தனையாளர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குகிறார்கள்.
ஆதிக்க குணம் என்பது ஆண்களின் பலவீனமாக இருப்பதைப் போல... அவசர புத்தி என்பது பெண்களின் பலவீனமாக இருந்து பல குளறுபடிகளுக்கு காரணமாகிக் கொண்டிருக்கிறது.
(எனது தாய், எனது மனைவி, எனது சகோதரிகள் தவிர இந்த உலகில் இருக்கும் மீதிப் பெண்கள் அனைவருமே அவசர புத்திக்காரர்கள் என்பது அடியேனின் கணிப்பு)
பாண்டுரங்க நாயுடு, சென்னை-17.
நீர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவரா?
மனிதனில் கடவுளைத் தேடும் கொள்கை உடையவன்.
சத்தியம் ஜெயிக்கும் என்பது நிஜமா?
இப்போதெல்லாம் சத்தியம் காலம் கடந்துதான் ஜெயிக்கிறது. இதனால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசித்திருக்கிறேன்.
சந்திரவதனா கைலாசபிள்ளை, லண்டன்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்களை நீங்கள் கேட்பதேயில்லையா?
எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்புராமன், ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஆதி நாராயணராவ்,
எஸ். ராஜேஸ்வரராவ், டி. சலபதிராவ், கோதண்டபாணி, டி.வி. ராஜூ, கண்டசாலா,
ஏ.எம். ராஜா, வி. தட்சிணாமூர்த்தி, டி.ஆர். பாப்பா, ஆர். சுதர்சனம், ஆர். கோவர்த்தனம்,
எம்.பி. சிறீநிவாஸன், மலையாள தட்சிணாமூர்த்தி, நௌஷாத், மதன்மோகன்,
சலீல் சௌத்ரி, ஹேமந்த்குமார், சி. ராமச்சந்திரா, சித்ரகுப்தா, வசந்த் தேசாய்,
ஒ.பி.நய்யார்,ரோஷன், எஸ்.டி. பர்மன், ரவி, கயாம், சங்கர் ஜெய்கிஷன், லட்சுமி காந்த்-பியாரிலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஆர்.டி. பர்மன்... ஆகியோர் இசையமைத்த பாடல்களைத்தான் பெரிதும் விரும்பிக் கேட்பதுண்டு.
ரகுமானால் யான் அதிகம் ஈர்க்கப்படவில்லை. எனினும், அவரது ஆழ்ந்த தொழில் ஈடுபாடும், அசாத்தியமான உழைப்பும், அகன்ற உலகப் பார்வையும் என்னை வியக்க வைத்ததுண்டு. ரகுமானின் பாடல்களில் யான் பதிவு செய்து ரசித்த சில வைரங்களும் உண்டு. அவை வருமாறு:
1. நறுமுகையே... (படம் - இருவர்)
2. தீண்டாய் மெய் தீ;ண்டாய்... (படம் - என் சுவாச காற்றே)
3. காற்றே என் வாசல் வந்தாய்...; (படம் - ரிதம்)
4. பச்சைக்கிளிகள் தோளோடு... (படம் - இந்தியன்)
5. மலர்களே மலர்களே... (படம் - லவ் பேர்ட்ஸ்)
6. பூப்பூக்கும் ஒசை... (படம் - மின்சாரக் கனவு)
7. புது வெள்ளை மழை... (படம் - ரோஜா)
8. கண்ணாளனே... (படம் - பம்பாய்)
9. உயிரே உயிரே... (படம் - பம்பாய்)
10. மெட்டுப் போடு... (படம் - டூயட்)
11. என் வீட்டுத் தோட்டத்தில்... (படம் - ஜென்டில் மேன்)
12. கொஞ்சும் மைனாக்களே... (படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
13. மார்கழி திங்கள் அல்லவா... (படம் - சங்கமம்)
சி. தர்மகுல சிங்கம், கொழும்பு
அன்று சிவாஜி... இன்று?
யாருமில்லை.
சு. சதாசிவம், விழுப்புரம்
தம்பி... என் வயது 64. என்னிடம் பதவியும் செல்வாக்கும் இருந்தபோது என்னைத் தேடி வந்தவர்களில் ஒருவர் கூட இப்போது என்னைக் கண்டு கொள்வதில்லை. இதில் எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அடங்குவர். இப்படி காரியவாதியாக எல்லோருமே ஏன் நடந்து கொண்டார்கள்?
பட்டம், பதவி, பணம், வீடு வாசல், வெளிநாடு... இப்படி எதையாவது கொட்டிக் கொடுப்பார் கடவுள் என்ற எதிர்பார்ப்பில்தான் பலர் கோயிலுக்கு போகிறார்கள். அல்லது குறைந்த பட்சம் மனநிம்மதியாவது கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் கோயிலுக்குப் போகின்றார்கள். ஆக, எதிர்பார்ப்புகள் இல்லாமல் யாருமே கோயிலுக்குப் போவதில்லை.
எவ்வளவு மகிமையுள்ள சாமியாக இருந்தாலும் அது நமக்கு எதையுமே தரப் போவதில்லை என்று தெரிந்தால், யாருமே சாமி கும்பிடப் போக மாட்டோம்.
சாமி;க்கே இந்த நிலைமையென்றால்... நீங்களும் நானும் எம்மாத்திரம்?
நடந்ததை எல்லாம் ஒரு நாடகம் என்று நினைத்து மறந்து விடுங்கள்.
வ.பாலமுருகன், கடலு}ர்
சிவாஜி, எம்.ஜி.ஆர் தவிர்த்து... மற்ற நடிகர்களுக்காக டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் மிகவும் அபூர்வமான 30 பாடல்களை பதிவு செய்து கேட்டு ரசிக்க விரும்புகிறேன். சில நல்ல பாடல்களைக் கூறி தாங்களும் எனக்கு உதவலாமே?
1. நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் (படம் - பூவும் பொட்டும்)
2. குயிலாக நான் இருந்தென்ன... குரலாக நீ வர வேண்டும் (படம் - செல்வமகள்)
3. வெண்ணிலா முகம் (படம் - செல்வமகள்)
4. தன்னந்தனியாக நான் வந்தபோது... (படம் - சங்கமம்)
5. மனம் என்னும் மேடையிலே (படம் - வல்லவனுக்கு வல்லவன்)
6. அன்பே உன் பெயர் அன்னை (படம் - படித்த மனைவி)
7. பட்டப்பகலில் வட்டநிலவு (படம் - நேர்வழி)
8. பூஞ்சிட்டுக் கன்னங்கள் (படம் - துலாபாரம்)
9. ஆடும் மயிலே ஆட்டமெங்கே (படம் - துளசி மாடம்)
10. சின்னச் சின்ன மூக்குத்தியாம்...
11. உன் பருவத்தின் மீதென்ன துடிப்பு... ஆசையா கோபமா... (படம் - இரு வல்லவர்கள்)
12. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் (படம் - இரு வல்லவர்கள்)
13. இளமை நாட்டிய கோலம் (படம் - கல்யாணமாம் கல்யாணம்)
14. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே (படம் - ஆயிரம் ரூபாய்)
15. கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை (படம் - தபால்காரன் தங்கை)
16. வானில் முழு மதியைக் கண்டேன் (படம் - சிவகாமி)
17. வா... அந்த உலகத்தின் மறுபக்கம் இங்கே (படம் - ஓடும் நதி)
18. சங்கம் படைத்த தமிழ் (படம் - துலாபாரம்)
19. பார்த்த கண்கள் நான்கு (படம் - உல்லாசப் பயணம்)
20. எங்கே எங்கே என் மாது (படம் - வாலிப விருந்து)
21. அன்பே அமுதா... நீ பாலமுதா... சுவை தேனமுதா (படம் - அமுதா)
22. நிலவோ அவள் இருளோ... (படம் - அருணகிரிநாதர்)
23. ஆட வேண்டும் மயிலே (படம் - அருணகிரிநாதர்)
24. சித்திரை மாத நிலவினிலே... தென்றல் வீசும் பொழுதினிலே...
25. அவள் ஜாதிப்பூவெனச் சிரித்தாள் (படம் - பதிலுக்கு பதில்)
26. தேவியின் திருமுகம்... தரிதனம் தந்தது... (படம் - வெள்ளிக்கிழமை விரதம்)
27. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு (படம் - தேரோட்டம்)
28. மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ... (படம் - பிள்ளையோ பிள்ளை)
29. எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா... (படம் - கார்த்திகை தீபம்)
30. கை விரலில் பிறந்தது நாதம் (படம் - கல்லும் கனியாகும்)
31. பூவினும் மெல்லிய பூங்கொடி... பொன்னிறம் காட்டும் பைங்கிளி (படம் - கண்ணன் வந்தான்)
32. அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தையில்லை...
33. தொட்டுத் தொட்டுப் பாடவா (படம் - வல்லவன் ஒருவன்)
34. கால்களே நில்லுங்கள் (படம்- துளசிமாடம்)
35. நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே (படம் - கல்லும் கனியாகும்)
36. எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே (படம் - கல்லும் கனியாகும்)
37. மௌ;ள மௌ;ள அருகில் வந்து... மென்மையான கையைத் தொட்டு (படம் - சாரதா)
38. மண்ணானால் நான் மரமாவேன்...
39. பதினாறு நிறையாத பருவ மங்கை (யானை வளர்த்த வானம்பாடியின் மகள்)
40. எழுதாத பாடல் ஒன்று (படம் - தேன் சிந்துதே வானம்)
41. நாள் நல்ல நாள் (படம் - பணக்கார பெண்)
42. வடிவேலன் மனது வைத்தால்... (படம் - தாயில்லாமல் நானில்லை)
43. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழியுது (பட்டாம் பூச்சி)
44. உறவு என்ற வானத்திலே நாம் பறவையாகலாம் (படம் - நாம் மூவர்)
45. நீ எங்கே என் நினைவுகள் அங்கே...
46. வெண்ணிலா வானில் வரும் வேளையில் நாம் விழித்திருந்தோம்...
47. குங்குமச் சிமிழில் மாதுளம் மொட்டுக்கள் கொட்டிக் கிடப்பதென்ன(படம் - எதிரொலி)
48. மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே(படம் - பூவா தலையா)
49. நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய மொழி கேட்டு (படம் - ஐந்து லட்சம்)
50. எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது... (படம் - வெகுளிப் பெண்)
51. நீ ஆட ஆட அழகு (பொம்மலாட்டம்)
52. நல்ல நாள் பார்க்கவா (படம் - பொம்மலாட்டம்)
53. நேற்று நீ சின்ன பாப்பா (படம் - மேஜர் சந்திரகாந்த்)
54. சிவப்புக் கல்லு மூக்குத்தி (படம் - எல்லோரும் நல்லவரே)
55. விண்ணுக்கு மேலாடை (படம் - நாணல்)
56. ஞாயிறு என்பது கண்ணாக (படம் - காக்கும் கரங்கள்)
57. காவிரிப் பெண்ணே வாழ்க (படம் - பூம்புகார்)
58. பொன்னாள் இது போலே வருமா இனிமேலே (படம் - பூம்புகார்)
59. கிழக்கு வெளுத்ததம்மா... கீழ்வானம் சிவந்ததம்மா (படம் - அவன் பித்தனா)
60. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி (படம் - பட்டணத்தில் பூதம்)
61. ஆடுவது வெற்றி மயில் (படம் - அக்கா தங்கை)
62. கொடியில் இரண்டு மலருண்டு; (உயிரா மானமா)
63. பார்வை ஒன்றே போதுமா (படம் - யார் நீ)
64. அன்புள்ள மான்விழியே (படம் - குழந்தையும் தெய்வமும்)
65. நாணத்தாலே கால்கள் பின்னப்பின்ன (படம் - சி.ஐ.டி. சங்கர்)
66. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (படம் - நான்கு கில்லாடிகள்)டிடிடி
67. புன்னகையில் ஒரு பொருள் வந்தது (படம் - பவானி)
68. ஓளி பிறந்த போது... (கன்னிப்பெண்)
69. அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் (சினேகிதி)

:: posted by suratha yarlvanan, 6:09 AM