Yazh Suthakar Pathilkal

Friday, May 21, 2004

யாழ் சுதாகர் பதில்கள் பகுதி 2-1

தி. வைத்தீஸ்வரன், திருச்சி

அறிஞன்... எப்போது முட்டாள் ஆகிறான் ?
முட்டாள்... எப்போது அறிஞன் ஆகிறான் ?
அறிஞன்... தான் அறிஞன் என்று நினைக்கும்போது முட்டாள் ஆகிறான்.
முட்டாள்.. தான் முட்டாள் என்பதை உணரும்போது அறிஞன் ஆகிறான்.

வி.எ°.தவச்செல்வன், டென்மார்க்

உமக்கு யாரைப் பிடிக்காது ?

சுயநலம் பிடிக்கும்.
பொய் சொல்பவனைப் பிடிக்கும்.
குடிகாரனைப் பிடிக்கும்.
நன்றி கொன்றவனைப் பிடிக்கும்.
விபசாரம் செய்பவனைக் கூடப் பிடிக்கும்.
ஆனால் பொறாமை பிடித்தவனை மட்டும் பிடிக்காது.

என்னைக் கேட்டால் -
எப்போது உன்னிடம் பொறாமை குணம் துளி கூட இல்லை என்று நீ உரத்துச் சொல்ல ஆரம்பிக்கிறாயோ அன்று முதல் நீ கோயிலுக்குச் செல்வதையே நிறுத்திக் கொள்ளலாம் என்பேன்.

ப. செந்தில், மதுரை 10.

கோள் சொல்வது பாவம் தானே ?

அடுத்தவன் சொன்னால் தான் பாவம். நம்ம சொன்னால் பாவமில்லை.

சி.மனோகரன், கோயம்புத்தூர்
பழைய பாடல் - புதிய பாடல் ஒப்பிடு தலைவா ?

நிலவு - டியூப் லைட்

கிருஷ்ணகுமார், கொழும்பு
உண்மையான மனிதனை எங்கே காணலாம் ?

கஷ்டம் அறிந்து வலிய வந்து கை கொடுக்கும் நண்பனிடம்...
இல்லாதவர்க்கும், இயலாதவர்க்கும் இயன்றதைச் செய்யும் இதயங்களிடம்...
மனைவியின் சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட மதித்து நடக்கும் கணவனிடம்....

ஓ. பரந்தாமன், மேற்கு மாம்பலம்
ஒரு ஹைக்கூ சொல்லு தலைவா ?

கடவுள் மீது இரக்கம் வந்தது
செயற்கைப் பிரார்த்தனைகளுடன்
காலை நேர டி.வி.

பி. சிவலோகநாதன், ஆ°திரேலியா
ஊழ்வினைத் தத்துவத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?

அந்தந்தப் பிறப்பில் செய்கின்ற பாவங்களுக்கு அந்தந்தப் பிறப்பிலேயே தண்டனையைக் கொடுத்து கணக்கை செட்டில் பண்ணிவிட வேண்டும். அதை விட்டு விட்டு ஊழ்வினை, கோள்வினை என்று இழுத்துக் கொண்டே வந்து... இந்தப் பக்கமும் போக விடாமல், அந்தப் பக்கமும் போக விடாமல்.. முட்டுக் கட்டைகள் போட்டு மனிதர்களை முடக்கி வைப்பதும், அடக்கி வைப்பதும், தொழ வைப்பதும், தொய்ய வைப்பதும், தொங்க வைப்பதும் ஈரமுள்ள ஒரு இடத்திலிருந்து ஏவி விடப்படும் செயலாக எனக்குத் தெரியவில்லை

ரவிகாந்த், திருவல்லிக்கேணி
இலங்கை வானொலியில் கசிந்த குரல்களில் இன்றைக்கும் உங்கள் செவிகளை சிறைப்பிடிக்கும் குரல்கள் ?

கே.எஸ். ராஜாவைப் பற்றி பக்கப் பக்கமாக எழுதிவிட்டேன். மற்றும் கே.எஸ். பாலச்சந்திரன், சரா இம்மானுவேல்.

கதிரேசன், சென்னை
கண்டசாலா அவர்கள் கடைசியாய் பாடிய தமிழ்ப்பாடல் எது ?

எனக்குத் தெரிந்தவரை.... அன்புச் சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்.... என்ற பாடல்

எஸ்.பி. பிள்ளை, லண்டன்.
நீண்ட பிரசங்கம் எல்லாம் செய்கிறீர், பெரிய ஞானஸ்தன் என்ற நினைப்போ ?

பத்திரிகை உலகில் நான் ஒரு ஞானஸ்தன் அல்ல.
கவிதை உலகில் நான் ஒரு ஞானஸ்தன் அல்ல.
வானொலி உலகில் நான் ஒரு ஞானஸ்தன் அல்ல.
ஆனால் உலகின் எந்த மூலையில் தேடினாலும் என்னைப் போல ஒரு ரசிகன் கிடைக்க மாட்டான் என்பதில் இன்றைக்கும் எனக்கு தற்பெருமை அதிகம் தான் பிள்ளை அவர்களே...

மனோ, கொழும்பு
கவிஞன், பத்திரிகையாளன், வானொலி அறிவிப்பாளன் என உங்களுக்கு பன்முகத் திறமைகள் இருக்கின்றன. இதில் எதில் உங்களுக்கு அதிக ஆத்ம திருப்தி கிடைக்கிறது ?

எதிலுமே இல்லை.
காரணம்... எல்லாவற்றிலுமே நான் அரைகுறை.

வ. தர்மகுலசிங்கம், பிரான்ஸ்°
வாழ்க்கையிலே உயரமான இடங்களைத் தொடுவதற்கு எது அவசியம் ?
முயற்சியா ? திறமையா ? நேரமா ?

அறுபது சதவீதம் திறமை வேண்டும்
முப்பத்தி எட்டு சதவீதம் முயற்சி வேண்டும்
இரண்டு சதவீதம் நேரம் வேண்டும்
முதல் சொன்ன இரண்டு தகுதிகளும் இருந்து... அந்த இரண்டு சதவீத நேரம் மட்டும் ஒத்துழைக்க மறுத்தால் 98 சதவீத திறமையும், முயற்சியும்... அரோகரா.

ப. பாலமுரளி
எப்படிப்பட்ட கலரில் டிரெ° போட்டுக் கொண்டு வந்தாலும் அழகாகப் பொருந்தும் நடிகர் யார் ?

எந்தக் கலரில் டிரெஸ்° போட்டுக் கொண்டு வந்தாலும் அது அழகாகப் பொருந்துவது வாத்தியாருக்கு மட்டும் தான்.

பாடும் போது நான் தென்றல் காற்று பாடலில்... (நேற்று இன்று நாளை) துப்புமிட்டாய்காரர் போடும் கலரில் ஒரு டிரெஸ்° போட்டுக் கொண்டு வருவார் எம்.ஜி.ஆர். ஆனால் அந்தப் பாட்டு சீனில் எம்.ஜிஆருக்கு அது எவ்வளவு அம்சமாக இருந்தது ? எம்.ஜி.ஆரால் அந்த டிரெ°ஸூக்கே ஒரு தனி வசீகரமும் கம்பீரமும் வந்தது.
அதைவேறு எந்த சினிமா நடிகருக்குப் போட்டிருந்தாலும் சர்க்க° கோமாளி பரவாயில்லை என்று ஆகியிருக்கும்.

இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய டிரெஸ்° சாமுத்திரிகா லட்சணம் இங்கே மக்கள் திலகத்துக்கு மட்டுமே வாய்த்தது.

தே. குருநாதன், கனடா
அன்பு, பணம்.. இவற்றில் உயர்ந்தது எது ?

சம்பிரதாயமாகச் சொன்னால்.... அன்பு.
சத்தியமாகச் சொன்னால் ... பணம் !

எல். சபேசன், சுவிட்சர்லாந்து
கவிஞர் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

பராசக்தி படத்தில் அவர் எழுதிய இந்தப் பாடல்....

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே !
(தேசம் ஞானம் )

என்றைக்குமே சாசுவதமாக இருக்கும் என நான் நினைத்திருந்த வேலை பார்த்த நிறுவனம் திடீரென ஒரு நாள் நஷ்டத்தில் மூழ்கி இழுத்து மூடப்பட... நான் வீதிக்கு வந்தபோது...

அதுவரைக்கும் என்னைச் சுற்றிச் சுற்றி சொந்தம் கொண்டாடிய நண்பர்கள் கூட்டமும், அருகிலிருந்த உறவுத் தோட்டமும் என்னை முற்று முழுதாக மறந்தபோது...

பொருளாதாரச் சுழலில் என் வாய்மை, தூய்மை, நேர்மை... எல்லாமே கேலிப் பொருளாக்கப்பட்டபோது....

வலியப் போய் நான் வாய்ப்புக் கேட்ட இடங்களில் எல்லாம் என் தன்மானம்....
அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்டபோது...

இந்தப் பாடலை எழுதிய உடுமலை நாராயணகவியின் திசையை நோக்கி கரம் குவித்து அழுதேன்.

ஆனந்தி செல்லத்துரை, மயிலாப்பூர்
முகம்மது ரஃபி - முகேஷ் - கிஷோர் குமார்... ஒப்பிடுக.

முகம்மது ரஃபி... மொட்டு மென்மை மேலோங்க உள்ளம் தொட்டுத் தொட்டுப் பாடும் தேவ பாஷை.

முகேஷ்.. இவர் குரலில் சின்னதாக ஒரு சோகம் சிறகசைக்கும்... அது ரசிக உயிர் வரை ஊடுருவி ஈரத்துளிகள் பரப்பும்.

கிஷோர்குமார்... குரலிலே சலங்கை கட்டி ஆடும் குதூகலக் குயில்.. ராக சாமரங்கள் வீசிப்பாடும் சந்தோஷத் தென்றல்.

சி.மனோகரன், கோயம்புத்தூர்.
எப்ப பார்த்தாலும் டச்சுக் காலத்துக் கதையே பேசிக்கிட்டிருக்கே.. நிகழ்காலத்துக்கு வா தலைவா.. முடிந்தால் ஒரு கவிதை சொல்லு எங்க ஹரிஹரனை பற்றி... ?

ஹலோ ஹரிஹரன் என்ற தலைப்பில் ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பான எனது கவிதையில் இருந்து சில வரிகள்... (நடுவில் அவர் பாடிய பாடல்கள் ஒலிக்கும்)

சங்கீத ஆலாபனையால் சர்க்கரைப் பந்தல் போடும்
வசீகரனே.. ஹரிஹரனே வருக !
பொங்கும் பூம்புனலாய் பொழுதை சுகப்படுத்தும்
புதுக் குயிலே மதுரசமே வருக !

தாஜ்மஹாலின் கலை அழகை குரலிலே சுமந்துவரும்
ராகமஹாலே வருக !
தாமரை மொட்டு இதழ் மலர்வதைப் போல்
தங்கப் பாட்டு ஒன்று தருக !

மின்னல் சலங்கை கட்டி பொன் தமிழை குளிர வைக்கும்
கன்னல் குரல் அழகே வருக !
தென்றல் அடியெடுத்து மெல்ல நடப்பது போல்
காதல் கீதம் ஒன்று தருக !

கலையுலக ரசிகர்களை தலையாட்டி ரசிக்க வைக்கும்
விலையுயர்ந்த வித்தகரே வருக !
குலைகுலையாய் ராகப்பழம் குரலிலே கொண்டுவரும்
ஆலாபனை அரசே வருக !

ஆலாபனைகளால் ஆட்சி நடத்தும்
கோலாகல குயிலே வருக ! - இசை
பாலாபிஷேகத்தால் இதயம் நனைக்கும்
பாட்டுப் புரோகிதரே வருக !

ராக தீபம் ஏந்திவந்து
கீத மழை பொழிக !
தோகை மயில் இறகு போல - நெஞ்சை
தொட்டுத் தொட்டு வருக !

சந்திர பிம்பமாம் நின் குரல் சொல்லிடும்
சுந்தர சங்கதி எத்தனை எத்தனை ! - உன்
தந்திர குரலிலே என்னென்ன மாயமோ ? - °வரம்
பந்தாடும் பாணியில் எத்தனை கோலமோ !...

சி.மோகனா, திருவனந்தபுரம்
கலைத்துறையில் நீங்கள் எப்போதெல்லாம் பெருமைப்பட்டிருக்கின்றீர்கள் ?

இதுவரை மொத்தம் நான்கு முறை பெருமைப்பட்டிருக்கிறேன்.

1. தெனாலி வெள்ளி விழா மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஈழத்துக் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பாராட்டிப் பேசியபோது...

2. ஈழத்து இசையமைப்பாளர் உதயா அவர்கள் இசையமைத்த முதல் பாடலைப் பாடிய எ°.பி.பி. அவர்கள் சாங் ஆப் தி டேஎன்று உதயாவின் இசையமைப்பைப் பாராட்டியபோது.. (பாடல் - ஓ... ஊர்வலம்)

3. அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது அவர்களிடம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்... ஹமீது நானும் உங்கள் ரசிகன் என்று சொன்ன போது...

4. 1987ல் என்று நினைக்கிறேன். வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் எழுதிய ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற நூலிலிருந்து சில கவிதை வரிகளை பாலுமகேந்திரா அவர்கள் சத்தமாக அனுபவித்துப் படித்துக் காட்டி ஜெயபாலனைப் பற்றி என்னிடம் பாராட்டிப் பேசிய போது...

கிருபா, குவைத்
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கடவுள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் ?

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால்...
உலக இனங்கள் அனைத்துமே அவர் குழந்தைகள் தானே.
ஆனாலும் தமிழ் இனத்தைப் பொறுத்தவரை அவர் மாற்றாந்தாய் மனத்துடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்.

அதுவும் குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கடவுள் கல் நெஞ்சக்காரராகவே காலத்தை நகர்த்தியிருக்கிறார்.
இனிமேல்..?காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தே. மனோகரி, லண்டன்
திடீரென ஒரு நாள் கடவுள் உம் முன்னே தோன்றி... ஒரே ஒரு வரம் மட்டும் கேள் தருகிறேன்.. என்று சொன்னால்.. என்ன வரம் கேட்பீர் ?

கடவுளே நீ என் முன் தோன்றியதும், கடவுள் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நிரூபணமாகிவிட்டது.
அந்த நிரூபணமே.. எனது பல சந்தேகங்களுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வுகளைத் தரப் போகிறது பிறகு எதற்காக ஒரு வரத்தைக் கேட்டு அதை வீணாக்க வேண்டும்? நீர் வந்ததே வரம் தான். போய் வாரும் என வழியனுப்பி வைப்பேன்.

கு.தவமணி, சுவிட்சர்லாந்து
உமது வாழ்க்கையிலேயே மிகவும் பெரும் சாதனையாக கருதுவது... எதை ?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதை.
(ஒரே ஒரு தடவையாவது எம்.ஜி.ஆரை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... அது நிறைவேறவில்லை.)

சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவா°, ஜேசுதா° போன்ற பாடகர்களுக்கு இணையாக இந்தத் தலைமுறை பாடகர்களில் யாரைக் குறிப்பிடலாம். ?
எத்தனை பேர் வந்து இன்றைக்கு முக்கினாலும் அவர்களின் நிழலைக் கூட இவர்களால் நெருங்க முடியாது.

மா.ரவிச்சந்திரன், ஜெர்மனி
நான் ஒரு பழைய பாடல் பைத்தியம் (கிட்டத்தட்ட உங்களைப் போல) பழம் பெரும் இந்திப்பட இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், சங்கர் ஜெய்கிஷன் போன்றோர் இசையமைத்த அருமையான பாடல்களைக் கொண்ட சில படங்களின் பெயர்களைக் கூறமுடியுமா ?

நீங்கள் சொன்னதும் நான் அந்தப் பாடல்களின் இசை நாடாக்களைத் தேடிப் பிடித்து வாங்கவுள்ளேன்.


எஸ்.டி.பர்மன் அவர்களின் காலத்தை வென்ற இசையில் மலர்ந்து மயில் இறகால் மனம் தடவும் பாடல்களைக் கொண்ட சில இந்திப் படங்கள் இதோ...
Kala Bazaar, Tere Ghar Ke, Paying Guest, Baazi, Guide, Mili,
Munimji, Jugnu, Nau Do Gyarah, Taxi Driver, Chupke Chupke,
Naya Zamana, House No.44, Kalapani, Pyaasa, Jewel Thief,
Anurag, Aradhana, Sharmilee, Abimaan...
இந்தித் திரை இசையில் மேலைத் தேச இசையைப் புகுத்தி புதிய சிகரங்களைத் தொட்ட இசை இரட்டையர்கள் சங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்த அசத்தலான பாடல்களைக் கொண்ட சில படங்கள்..
Barsaat, Jis Desh Men Ganga Behti Hai, Jahan Pyar Mile,
Raj Kumar, Prince, Love Marriage, Dil Apna Aur Preet Parai,
Sangham, Shree 420, Bramachari, Tumse Accha Kaun Hai,
Diwana, Sapnam Ka Saudagar, Around the world, Chori Chori,
Anari, Aah, April Fool, Ham Ragi... என்று பட்டியல் நீள்கிறது.

இரத்தினவேல், வந்தவாசி
தனிமையிலே இனிமை காண முடியுமா ?
புடுங்கல்கள் இல்லாமல் இருந்தால்
கறிக் கடைச் சந்தையில் கூட இனிமையைக் காணலாம்.
(புடுங்கல்கள் இருக்கும்வரை நந்தவனம் கூட நரகம்
:: posted by suratha yarlvanan, 5:41 AM

0 Comments:

Post a Comment